கந்தளாய் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை(4) மாலையில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் குளத்துக்கு தோணியொன்றில் இருவர் மீன் பிடிக்கச் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயம் தோணி கவிழ்ந்து அதில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதோடு மற்றொருவர் நீரில் நீந்தி உயிர் தப்பியுள்ளார்.
மரணமானவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான எல்.எச்.லீவசிங்க வயது 46 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 Comments:
Post a Comment