24 Aug 2015

கோவிலுக்குச் சென்ற மகன் மீண்டும் வீடு வரவில்லை- தாய் முறைப்பாடு

SHARE


 கடந்த 1990.10.21 ஆம் திகதி இரவு கோவில் போரதீவு தெற்குகிலுள்ள எமது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பெரியபோரதீவு களிகோயிலுக்குச் அவரது 4 சகோதரிகளுடன், சென்ற பாடசாலை மாணவனான, 15 வயதுடைய எனது  திவாகரன் என்ற மகன் வீடு திரும்பவில்லை. திவாகரனின் தாய் வெள்ளையம்மா, தெரிவித்துள்ளார்


காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஞாயிற்றுக் கிழமை (23) களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட விசாரணையின்போதே அவர் கலந்து கொண்டு ஆணைக்குழுவின்  முன் சாட்சியமளித்துள்ளார். 
அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்….

அன்றயதினம் இரவு கோவிலுகுச் சென்ற எனது 5 பிள்ளைகளில் எனது 4 பெண்பிள்ளைகள் மாதம்திரமே எனது வீடு திரும்பி வந்தார்கள் எனது ஒரே ஒரு மகன் மீண்டும், வீடுதிரும்பி வரவில்லை. மகனை தேடித், தேடி அலைந்தோம் கிடைக்கவில்லை. 

பின்னர் எமக்கு தகவல் ஒன்று கிடைத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் எனது மகனைக் கடத்திச் சென்றுள்ளதாக அறிந்தோம். அப்போது கருணா அம்மானின் தலைமையிலான தமிமீழ விடுதலைப் புலிகள்தான் அந்தப்பகுதியில் முகாமிட்டிருந்தார்கள்.  அவர்கள்தான் எனது மகனைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.

எனது ஒரே ஒரு மூத்த ஆண் மகனை தமிழீழ விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளார்கள் தற்போது 4 பெண் பிள்ளைகளோடு முறையான வீட்டு வசதிகளுமற்ற நிலையில் சிறியதொரு கொட்டகையில்,  மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வருகின்றோம்.  எனது கணவருக்கும் வயது முதிர்ந்து விட்டது அந்த நிலையிலும்கூட அவர் கூலி வேலை செய்து என்னையும் 4 பெண்பிள்ளைகளையும் பார்த்து வருகின்றார்கள். 

எமக்கு அரசாங்கத்தினால் வீடும் கட்டித்தரவில்லை, எந்தவித உதவியும் வழங்கப்பட வில்லை, ஏன் என கிராம சேவை வினவினோம் அதற்கு எமக்கு சிறியதொரு கொட்டகைதான் கிடைத்துள்ளது எமக்கு எமக்கு அரசாங்கம் உதவ, வேண்டும். எனது மகன் பற்றிய விடயங்களையும் தெரிவிக்கவேண்டும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: