8 Aug 2015

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பில்

SHARE

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை (07) விழிப்புணர்வு ஊர்வலம், வீதி நாடகம், கருத்தரங்கு என்பனவும் நடைபெற்றன.

மட்டக்களப்பு முதியோர் சங்கங்கள், மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சித்திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம் என்பன இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்தன.


மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மணிக்கூண்டுக் கோபுரத்திலிருந்து ஆரம்பமாகி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரையில் சென்றது.இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

அதனையடுத்து மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் வீதி நாடகம் நடைபெற்றது. அடுத்து பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, திணைக்கள உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.இதில் விரிவுரையினை மட்டக்களப்பு பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எப்.ரகுமான் நிகழ்த்தினார்.

SHARE

Author: verified_user

0 Comments: