மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்கள் பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர சபை மண்டபத்தில் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் பி.சடாச்சரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலளார் எஸ்.தவராஜா, மட்டக்களப்பு மாநகர சபை பிரதி உதவி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன், லயனல் கலாநிதி செல்வேந்திரன், வைத்திய கலாநிதி டாக்டர் ஆர்.நவலோஜிதன் உட்பட முக்கியஸ்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் 130 சுகாதார தொழிலாளர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு பிரமுகர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலளார் எஸ்.தவராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment