மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா தகவல் மையம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கொய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஹான் ஏய் ஜின் ஆகியோரால் நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸினால் சுற்றுலா தகவல் நிலையத்தின் ஒரு பிரிவான உடற்பயிற்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களங்களின் ஆணையாளர் எம்.வை.சலீம் துவிச்சக்கரவண்டிகள் கூடத்தைத் திறந்து வைத்தார்.
சுற்றுலா புகையிரத வண்டியை ஆசிய பவுண்டேசன் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டினேஸா டி சில்வா விக்கிரமநாயக்கா ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பின் மரபுரிமைமிக்க இடங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சிக் கூடத்தை ஆசிய பவுண்டேசன் பிரதிக் குழுத் தலைவர் ஏ.சுபாகரன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.எம். அஸீஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புகைப்படக் கலைஞர்களுக்கான சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி வைத்தார்.
அத்துடன் மட்டக்களப்பின் பாரம்பரியம், கலை மற்றும் கலாசார விழுமியங்களை வெளிக்கொண்டு வரும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment