அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாணவர்களின் நலன் கருதி அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் பற்சிகிச்சை நிலையம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த பற்சிகிச்சை நிலையம் பிராந்தியத்தின் ஐந்தாவது நிலையமாகவுள்ளதுடன், அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட 25 பாடசாலை மாணவர்களுக்கும் இதன் மூலம் சேவை வழங்கப்படவுள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் தெரிவித்தார்.
பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாம், மாவட்ட பற்சிகிச்சை வைத்திய நிபுணர் ஏ.எல்.லத்தீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் -
0 Comments:
Post a Comment