ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அருண சிறிசேனவின் ஆதரவாளர்கள் பயணித்த வான் வீதியை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் விழுந்ததினால், காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆதரவாளர்கள் பதவிசிறிபுரவில் தேர்தல் பிரசார நடவடிக்கையை முடித்துவிட்டு வியாழக்கிழமை அதிகாலை இந்த வானில் திரும்பிக்கொண்டிருந்தபோது, வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கோமரங்கடவெல திரியாய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானதாகவும்; பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment