மத்தியமுகாம் 11ஆம் மற்றும் 13ஆம் கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம்முறை புதிதாக பல்கலைக்கழகம் நுழையும் கனிஷ்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை ஒன்றியத்தின் தலைவர் கே.தினேஸ் தலைமையில் சது /றாணமடு இந்து மகா வித்தியாலய தினகரம்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிறிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதன்போது, புதிதாக பல்கலைக்கழகம் நுழையும் கனிஷ்ட மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அங்கத்துவ அட்டையும் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment