ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமாரவினை அண்மையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர்.
இதன்போது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிற்கான ஏற்பாடுகள் குறித்தும் நிலவரங்கள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்கள்.
அரசாங்க அதிபருடன் திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கமவும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment