18 Aug 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள்

SHARE

(ஏ.எச்.ஏ. குஸைன்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி 127185 வாக்குகள் ஊடாக 03 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 38477 வாக்குகளைப் பெற்று 01 அ+சனத்தினையும், ஐக்கிய தேசியக் கட்சி 32359 வாக்ககளைப் பெற்று 01 ஆசனத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இதன்பிரகாரம் கல்குடா தொகுதியில்இலங்கை தமிழரசுக் கட்சி 28718 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 17142 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 9093 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7990 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.

அதேநேரம் மட்டக்களப்பு தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 56876 வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 22869 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20258 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 6179 வாக்குகளையும் பெற்றுள்ளது.

அத்துடன் பட்டிருப்பு தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 35595 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 7937 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3276 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பின் பிரகாரம் இலங்கை தமிழரசுக் கட்சி 6056 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 1390 வாக்ககளையும், ஐக்கிய தேசியக் கட்சி 1101 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில்இம் மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது
ஏ.எச்.ஏ. ஹ{ஸைன் 

SHARE

Author: verified_user

0 Comments: