மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச்சபையை புனரமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (15) மாலை நடைபெற்றது.
சுதேச வைத்திய அமைச்சின் கீழுள்ள ஆயுர்வேத திணைக்களத்தினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு;ள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயுர்வேத வைத்தியர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையில் உள்வாங்குவது எனவும் இதற்கான விண்ணப்பப்படிவங்களை அவர்களுக்கு வழங்கவும் மேற்படி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி ஆயுர்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment