8 Aug 2015

அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து பேரம் பேச மக்களின் அமோக ஆணை வேண்டும்! சீனித்தம்பி யோகேஸ்வரன்

SHARE

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்திலே முன்வைத்திருக்கின்ற அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு வடக்கு கிழக்கு  தமிழ் மக்கள் ஓர் அணியிலே திரண்டு மிகவும் தெளிவாக தங்களுடைய முற்று முழுதான ஆணை வழங்க வேண்டிய தேவை உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்!

“நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தெற்கிலே தேசிய கட்சிகளுடையே பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் நாம் இந்த தேர்தலை எதிர் நோக்குகிறோம். இந்த சந்தர்ப்பங்களை நாங்கள் மிக கவனமாக எமக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும்.
இம்முறை தேர்தல் போட்டியிடும் தேசிய சிங்கள கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலே அதற்குள்ளே தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு இதுவல்ல.
கடந்த 65 வருடங்களுக்கு மேலாக எமது மக்களின் உரிமைப் போராட்டங்களின் செய்யப்பட்ட தியாகங்களின் மத்தியில் நாங்கள் இதுவரை காலமும் போராடியது ஒற்றையாட்சியின் ஒரு தீர்வைப் பெறுவதற்காக அல்ல எமது மக்கள் தங்களது நிலங்களிலே தாங்களே ஆளுகின்ற வகையில் ஒரு சமஷ்டி முறையை உருவாக்க வேண்டும் என்பது இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதனை அடிப்படைக் கொள்கையாக விருந்து வந்திருக்கிறது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவாக மக்கள் முன்னிலையில் அவர்களது ஆணையைப் பெறவேண்டும் என்பதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்திலே முன்வைத்திருக்கின்றது.
இந்த சமயத்திலே எமது உறவுகள் சிறந்த முறையில் சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் இருக்க கூடிய தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகபடியான வாக்குகள் வழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த தேர்திலே 20 ஆசனங்களைப் பெறவேண்டும் என எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா கட்டளையிட்டிருக்கிறார். வடக்கு கிழக்கிலே இருபது ஆசனங்கள் பெற வேண்டுமானால் மட்டக்களப்பு மாவட்டத்திலே கட்டாயம் நான்கு ஆசனங்கள் பெற்றே ஆக வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 74 சதவீதமாக வாழ்கின்றனர் எமது மக்கள் சிறந்த முறையில் சிந்தித்து அதிகபடியாக வாக்களிக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் அமையப் போகும் புதிய அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும் இருக்க முடியும் அதனுடாக இத்தனை காலமும் எமது மக்கள் செய்த தியாகங்களுக்கு ஒரு விடியலை தேடித்தரும் தீர்வினை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யும் ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்
SHARE

Author: verified_user

0 Comments: