21 Aug 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப்பலம் அதிகரித்துள்ளது- வியாளேந்திரன்

SHARE

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப்பலம் அதிகரித்துள்ளது, இனிவரும் எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகதத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் ச.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஈச்சந்தீவு கிராம மக்கள் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வும் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஈச்சந்தீவு விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப்பலம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இனிவரும் அனைத்து தேர்தல்களிலும், தமிழ்  தேசியக் கூட்டiமைப்பு அதிகப்படியான வாக்குகளால் அமூக வெற்றிபெறும், தமிழ் மக்கள் என்றும் தமிழ் தேசியத்தின் பால்தான் நின்றுகொண்டிருக்கின்றார்கள். எமது மக்கள் வழங்கி வரும் ஆணையினால்தான் இன்றும் தமிழ் தேசியம் சர்வதேசம் வரைப் பேசிக்கொண்டிருக்கின்றது. என வெரி தெரிவித்தார்.

பின்னர் இக்கிராம மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்த  நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், கன்னிப் பாராளமன்ற அமர்வின் பின் இப்பகுதி மக்களின் முக்கிய குறைபாடுகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களிடம் உறுதியளித்தார்.

இங்கு ஆலயக் குருக்களினால் வெற்றி பெற்ற புதுமுக வேட்பாளர் வியாளேந்திரனுக்கு மலர் மாலை அணிவித், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.




SHARE

Author: verified_user

0 Comments: