23 Aug 2015

திருட்டு நால்வர் கைது

SHARE
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வீடொன்றில் திருட்டுப்போன சம்பவம் தொடர்பில் நான்கு பேரை சனிக்கிழமை (22) கைதுசெய்ததாக பொலிஸார்; தெரிவித்தனர். 

இந்தச சந்தேக நபர்களிடமிருந்து நான்கு மோதிரங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியொன்றையும் கைப்பற்றியதாகவும்; பொலிஸார் கூறினர். கடந்த ஏழாம் திகதி இரவு வேளையில் தாம் உறங்கிக்கொண்டிருந்தபோது உள்நுழைந்த திருடன், ஏழு தங்க மோதிரங்களையும் கையடக்கத் தொலைபேசியொன்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு திருட்டுப்போன கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த சந்தேக நபரான உயர்தரம் கற்கும் மாணவனை பொலிஸார் கைதுசெய்ததுடன், கையடக்கத் தொலைபேசியையும் கைப்பற்றினர். மேலும், இந்த மாணவனை கைதுசெய்வதற்கு முன்னர் விசாரணை செய்த பொலிஸாரிடம் மாணவனின் தந்தை  பிழையான தகவல்களை வழங்கியமைக்காக பொலிஸார் மாணவனின் தகப்பனையும் கைதுசெய்தனர்.

மாணவனிடமும் அவனது தந்தையிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை இந்த மாணவன் 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியமை தெரியவந்தது. இந்த நிலையில், பொலிஸார் மாணவனையும் அவனது தந்தையும் நேற்று (22) அக்கரைப்பற்று பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.றஸீட் முன்னிலையில் தலா ஒரு இலட்சம் ரூபாய் படி பிணையில் விடுவித்தார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு கையடக்கத் தொலைபேசியை திருடி விற்பனை செய்த இளைஞனையும் திருடிய பொருட்களை விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொருவரையும் கைதுசெய்தனர்.

உடந்தையாக இருந்தவரிடமிருந்து நான்கு மோதிரங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்; தொடர்பாக இன்னுமொருவர் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  
SHARE

Author: verified_user

0 Comments: