மண்டூர் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் 33வது ஆண்டு நிறைவு விழா ஞாயிறு(9) அன்று நிலையத்தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் காலை 5.00 மணிக்கு ஓங்காரம்,சுப்ரபாதம்,நகர சங்கீர்த்தனத்துடன் ஆரம்கமானது
தொடந்து மு.ப. 9.00 மணிக்கு பிரசாந்திக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது பிரசாந்திக் கொடியை ஸ்ரீ சத்திய சாயி மத்திய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர்.ந.பிறேமதாசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து அஸ்டோத்திரம், பஜனை மங்கல விளக்கேற்ரல் நடைபெற்றது பின்னர் நிலையத்தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது தொடந்து நிலையச் செயலாளர் ஸ்ரீ.ந.கோகுலன் அவர்கள் ஆண்டறிக்கையினை வாசித்தார்.
அதனையடுத்து அஸ்டோத்திரம், பஜனை மங்கல விளக்கேற்ரல் நடைபெற்றது பின்னர் நிலையத்தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது தொடந்து நிலையச் செயலாளர் ஸ்ரீ.ந.கோகுலன் அவர்கள் ஆண்டறிக்கையினை வாசித்தார்.
அதனையடுத்து நிலைய உபதலைவர் ஸ்ரீ.பி.பிரசாந்தன்,ஸ்ரீ.பி.பொ.விஜிக்குமார்(சேவை இணைப்பாளர் கிழக்கு பிராந்திய இ.குழு) ஸ்ரீ.ஆர்.ஜெகநாதன்(கல்வி .இணைப்பாளர் கிழக்கு பிராந்திய இ.குழு) எஸ்.லோகநாதன்(மனித மேம்பாட்டு கல்வி இணைப்பாளர் கி.பி.இ.குழு) ஆகியோரால் ஆன்மிக உரை நிகழ்தப்பட்டன. சிறப்புரையினை டாக்டர்.ஜே.தனேஸ்குமார்(இளைஞர் அணி தேசிய இணைப்பாளர் அவர்கள் நிகழ்த்தினார். ஆன்மிக சிறப்புரையினை ஸ்ரீ.எஸ்.லோகிதகுமார் (தலைவர் கிழக்குபிராந்திய இணைப்புக்குழு) ஸ்ரீ.தெய்வராஜன்(ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோர் ஆற்றினர்.
இறுதியாக மஹா மங்கள ஆராத்தியுடன் நிலைய உறுப்பினர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆன்மிக நிலைய பிரமுகர்கள் மற்றும் மண்டூர் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர் இன் நிகழ்வில்.
0 Comments:
Post a Comment