26 Jul 2015

வாழ்வில் உரிய முறையில் முன்னேற வேண்டுமாக இருந்தால் மது மற்றும் போதை வஸ்து பாவனையில் இருந்து விடுபட வேண்டும் பிரதேச செயலாளர் தயாபரன்

SHARE

ஒருவர் தனது வாழ்வில் உரிய முறையிலே மூன்று வேளையும் உணவுண்டு தங்களின் பிள்ளைகள் உரியமுறையில் கல்வி கற்பித்து  எதிர்காலத்தில் நல்ல பிரஜையாக்கி தங்களின் வாழ்வில் எழுச்சியடைய வேண்டுமாக இருந்தால்  மது மற்றும் போதை வஸ்து பாவனையில் இருந்து விடுபட வேண்டும் என வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வெருகல் பிரதேச செயலகத்தினால் மாபெரும் விழிப்பூட்டல் ஊர்வலம் ஒன்று பிரதேச செயலாளரின் தலைமையில் வெள்ளிக் கிழமை (22) நடைபெற்றது.  இந்த விழிப்பூட்டல் ஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்


உங்களுடைய பிள்ளைகள் உரியமுறையில் கல்வி கற்று  எதிர்காலத்தில் நல்ல பிரஜையாக வரவேண்டுமாக இருந்தால்இ வாழ வேண்டுமாக இருந்தால். உங்களுடைய குடுப்பமானது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பமானது மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாக  இருந்தால் அந்த குடும்பத்தில் மது பாவனையோஇ போதை வஸ்து பாவனையோ இருக்கக் கூடாது அவ்வாறு இருந்தால் மாத்திரம் தான் அந்த குடும்பமானது சமூக அந்தஸ்துடன் வாழ்த்து கொண்டிருப்பதாக கூறமுடியும் .

அது மாத்திரமின்றி இப் போதை பழக்கவழக்கத்தின் காரணமாகத்தான் குடும்பத்தில் வறுமை நிலவுகின்றது இதன் விளைவாக  சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கின்றீர்கள் இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டு இருக்கின்றது. 

எனவேதான் இவ்வாறான சிக்கல்களில் இருந்து  விடுபட வேண்டுமாயின் போதைவஸ்து பாவனை மதுபானையில் இருந்து  விடுபட வேண்டும்.
இந்த மது பாவனையானது தங்களது குடும்பந்தை மாத்திரம் சீரழிக்கவில்லை உங்களை சார்ந்துள்ளவர்களையும் சீரழிக்கின்றது மற்றும் பலதரப்பட்ட விபத்துக்களை ஏற்படுத்துவதிலும் இந்த மதுபாவனை செல்வாக்கு செலுத்தியுள்ளது.

மது அருந்துவதால் சமூகத்தில் ஒரு நபருக்கு சமூகத்தில் அந்தஸ்து கூட பாதிக்கப் படுகின்றது. மற்றும் குடும்பத்தில்லுள்ள அனைத்துக் குழந்தைகளின் வாழ்கையினையும் முற்று முழுதாக பாதிக்க வைக்கின்றது. இவ்வாறான இக்கட்டான நிலையினை நீங்கள் தோற்றுவிக்காமல் தங்களை தாங்கள் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மது பாவனையில் இருந்து விடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: