23 Jul 2015

பொதுமுகாமையாளர் இல்லாமையால் கால்நடைவளர்ப்பாளர்களுக்கு பாரிய சிரமம் -அமைச்சரிடம் முறைப்பாடு

SHARE

கிண்ணியா சூரன்கல் கால்நடை வளர்ப்பாளர்கள் கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தின் பொது முகாமையாளர் நியமனம் ஒரு மாதகாலம் கடந்தும் இன்னமும் தெரிவு செய்யப்படாமை குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் புதன் கிழமை (22) திருகோணமலை விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாலின் போது மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கத்திடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட்டுறவு திணைக்களம் இச்சங்கத்தின் நிர்வாகக் கால எல்லை முடிவுற்றதாலும் பொது முகாமையாளர் வேறு தொழில் நிமித்தம் விலகியமையாலும் ஓர் இயக்குனர் சபையினை தற்காலிகமாக நிறுவியது ஆனால் அதன் செயற்பாடுகள் போதுமானதாக இல்லாமையாலும் தங்களுக்கு வழங்கப்படுகின்ற பால்விற்பனை நிதி மற்றும் ஏனைய கடன் வசதிகள் போன்றன காலதாமதம் பெறுவதாகவும் கூறி மக்கள் அமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர், கூட்டுறவுத் திணைக்களத்தின் முக்கிய நிர்வாகிகள் கால்நடை வளர்ப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

மக்களின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விரைவில் இதற்கான தீர்வினை உரிய திணைக்களத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொதுமுகமையாளரை நியமிப்பதுடன் இச்சங்கத்திற்கென புதிய நிர்வாகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்துவதாகவும் கலந்து கொண்ட மக்களிடம் உறுதியளித்தார். 














SHARE

Author: verified_user

0 Comments: