29 Jul 2015

மு.கா.வுக்கு கிடைத்து வந்த ஒரு ஆசனமும் இல்லாமல் போய்விடும்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழமையாக கிடைத்து வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் மீறாவோடையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

கல்குடாத் தொகுதியில் எழுபத்தொராயிரம் தமிழ் வாக்களும், முப்பத்தி நாலாயிரம் முஸ்லிம் வாக்குகளும் உள்ளன. 

இரண்டு வாக்குகளும் சேர்ந்து தான் கல்குடாத் தொகுதி இதில் தனியாக நாம் மட்டும் வாக்களித்து எமக்குறிய பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாது. 

கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் மிக நீண்டகாலமாக அரசியலில் முகவரி இல்லாமல் இருந்து, மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் பாராளுமன்றம் சென்றதன் பின்னர் அதன் மூலம் நமக்கு கிடைத்த முகவரியை தக்க வைத்துக் கொண்டோம். 

அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஒட்டு மொத்த சமுகமும் இணைந்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். 

அவ்வாறான செயற்பாட்டிற்கு துரோகம் செய்ய வேண்டும் என்று எவர் எவர் நினைக்கின்றார்களோ அவர்கள் இந்த பிரதேசத்திற்கும் முஸ்லிம் சமுகத்திற்கும் அநியாயம் செய்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவது நிச்சயம். 

மற்றைய இரண்டு ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன பெறும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழமையாக கிடைத்து வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

1 Comments:

Shiva Sampanthan said...
This comment has been removed by the author.