23 Jul 2015

வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கச் செய்வதற்கான வியூகம் தமிழ் தேசிய ஆதரவாளர்களால் மட்டக்களப்பில் நிறைவேற்றம்.

SHARE

நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அமோகமாக வெற்றிபெறச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று செவ்வாய்க் கிழமை (21) மட் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான ஆரையம்பதி தாழங்குடா கிரான்குளம் புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன் தமிழ் மக்கள் அனைவரையும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கச் செய்வதற்கான திட்டங்களையும் வகுத்ததுடன் குறித்த திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்துவதெனவும் உறுதிபூண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாது தமிழ் தேசிய ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டத்திற்கு குறித்த பிரதேச தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளதனை இட்டு மாவட்டம் பூராகவும் இவ்வாறான கூட்டங்களை உடனடியாக நடாத்துவதற்கும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான த.இன்பராசா தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்கின்ற நோக்கில் பல கட்சிகளும் குழுக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன இதன் காரணமாகத்தான் இலங்கையிலேயே மிகவும் நீளமான வாக்குச் சீட்டை உடைய மாவட்டமாக மட்டக்களப்பு விளங்குகின்றது.

எனவே இந்தச் சூழ்ச்சியினை முறியடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை தொடர்ந்தும் பாதுகாக்க எம்மக்கள் ஓரணியில் திரள்வார்கள் இதற்கான சகல ஏற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என த.இன்பராசா மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: