29 Jul 2015

அழிவின் போது வேடிக்கை பார்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் - வேட்பாளர் ஜோர்ஜ் பிள்ளை

SHARE

முல்லிவாய்களில் பல 1000 கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் அழிக்கப்பட போது சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது . உரிமை பற்றி பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ் வேளையில் மௌனம் சாதித்தும் .சிலர் வெளிநாட்டிலும் தஞ்சம் அடைந்து இருந்தனர். .இந்த அப்பாவி மக்களின் மரணத்திற்கு இவர்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும் . இன்றும் அப்பாவி இளைஞர்கள் அரசியல் கைதிகளாக எதுவித விசாரணையும் இன்றி நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை விடுவிக்க எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள படவில்லை எனவும் காணமல் போனவர்கள் குறித்து எவ்வித முன்னேற்ற செயற்பாடுகளும் இல்லை எனவும் வாழைச்சேனை விநாயகர் புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூடத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளருமாகிய ஜோர்ஜ் பிள்ளை தெரிவித்தார்
மேலும் அவர் உரையாற்றுகையில் தமிழ் சமூகதிதிற்கு கௌரவமான தீர்வை பெற்றுத் தருவோம் என ஆணித்தனமாக கூறியவர்கள் கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுகளை பெற்று எமது கௌரவத்தை நிலைநிறுத்தி இருக்கின்றார்கள் தமிழ் சமூகம் செய்த அனைத்து தியாகங்களையும் மறந்து கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டிய நாம் இங்கு சோரம் போய் விட்டோம்.
காலத்துக்கு காலம் தேர்தல் வரும்போது மட்டும் தான் இவர்களின் தமிழ் உணர்வு வெளிப்படுகின்றது . சர்வதேசம் பார்க்கின்றது பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும் என்ற தாரக மந்திரத்தை சொல்லி சொல்லி தமிழ் சமூகத்தை எமாற்ரறிக் கொண்டு இருக்கிறார்கள் .கிழக்கு மாகாண சபையில் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாதவர்கள் பாராளுமன்றத்தில் எதை சாதிக்க போகின்றார்கள் ?.
இன்று அடிப்படை தேவைகள் இன்றி நமது தமிழ் மக்கள் வறுமைக்கோட்டின் கிழ் வாழ்கின்றார்கள் . கிராம புறங்களிலே போதுமான மருத்துவ வசதி இல்லை பாடசாலைகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன  தொழில் வாய்ப்பு இன்றி பல இளைஞர்கள் உள்ளார்கள் . இவற்றிக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு . மக்கள் சுவிட்சமான வாழ்வை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் சுய கௌரவத்துடனும் தன்மானத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது அபிலாசையும் என மேலும் தெரிவித்தார் .
SHARE

Author: verified_user

1 Comments:

Shiva Sampanthan said...

ஆம் அபிவிருத்திக்குத்தான் எங்கள் வாக்கு. ஆனால் உங்களுக்கு இல்லை. நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். உங்களின் அரசியல் நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624