27 Jul 2015

தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் நினைவுதினம்

SHARE

83ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின்போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளரரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பொறுப்பாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், ரெலோவின் உப தலைவருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நினைவு நிகழ்வில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
SHARE

Author: verified_user

0 Comments: