போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டத்திற்கமைவாக போதை தடுப்பு மாதத்தை முன்னிட்டு போதைப் பொருட்களை கிராம மட்டத்தில் ஒழிப்பதற்காக வேண்டி அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை (23) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கிராம மட்டங்களில் மக்கள் மத்தியில் காணப்படும் போதைவஸ்த்துக்களை அரச அதிகாரிகள் மக்களுடன் இணைந்து எவ்வாறு ஒழித்தல், இவற்றுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய உபாயங்கள், போன்றன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
போரதீவுப்பற்ற பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி குணசேகரம், போரதீவுப் பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.குபேரன், மற்றும் வெல்லாவெளி பொலிஸசார், உட்பட திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment