25 Jul 2015

இனங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு அரசியல்வாதி நல்ல தலைவனாக இருக்க முடியவே முடியாது-கணேசமூர்த்தி

SHARE

இனங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு அரசியல்வாதி நல்ல தலைவனாக இருக்க முடியாது. இங்குள்ள பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணங்கள் இங்கு இருந்த தலைவர்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பின் தற்போதய கதியை நினைத்து கவலைப்படுகிறேன். இதை நன்கு வாசித்தபின் சிந்தியுங்கள். அன்று நான் கல்விக்காக பல அடிக்கல் இட்டேன். ஆனால் சண்டைக்கு அடியாள் சேர்க்கவில்லை.

 ஏனெனில் உங்களுக்கு கல்விப்பலத்தை தந்து சிறந்த முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக. இன்று சிலர் படிக்கப் புத்தகங்கள் குடுக்க வேண்டிய பிள்ளைகள் கையில் விளையாட்டு கேடயங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குக் கேட்டு வருகிறார்கள். அப்பொழுதுதான் மக்கள் சிந்திக்காமல் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று. இப்போது அவர்களது கட்சிக்குள்ளேயே அடித்து ஒருவரை ஒருவர் காயப்படுத்துகிறார்கள். ஏன்? நாளை மக்கள் தமக்கு வாக்களிக்காமல் போனால் தமது தந்திர அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம். தழிழர் அழிந்தது தழிழனால்த்தான். இவர்கள்தான் உங்களுக்காக குரல் கொடுப்பார்களா? இதனால் தான் நான் மீண்டும் மீண்டும் இம்மண்ணின் மைந்தன் என்ற வகையில் கூறுகிறேன், உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற என்ன தேவையாய் இருக்குது? கொள்கை கொள்கை என்று கூறி எங்களது வம்சத்தை அளிப்பவர்களா? அல்லது என்னை போல் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு திட்டங்கள், இன நல்லிணக்க வேலைகள் போன்றவற்றை செய்பவர்களா? அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை நிறைய இருக்கு. வெளிநாட்டில் இருக்கும் போது பல விடயங்கள் கற்றுக்கொண்டேன். 

வெளிநாடுகளில் கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகையால் அவர்கள் ஒரு போதும் போலிக்கு கொள்கை பேசுபவர்களை பாராளுமண்றத்துக்கு அனுப்புவதில்லை. இதனால்தான் இந்த நாடுகள் முன்னேறிக்கொண்டே செல்கின்றன. அன்று என் தம்பி கொடூராமான முறையில் புலிகளால் கொல்லப்பட்டார்.

 அதற்காக அரசுடன் இணைந்து என் அரசியல் பலத்தை உபயோகித்து விடுதலைப் புலிகளை அழிக்க முயலவில்லை. ஏனென்றால் தமிழனை அழித்த தமிழனாக நானும் மாறியிருப்பேன். அன்று சந்திரிக்கா அம்மையார் எனக்கு சில உத்தரவாதங்களை தந்திருந்தார்.பேச்சு வார்தையின் மூலம் ஒரு அரசியல் தீர்வையை எடுத்துக் கொடுக்க முயன்றேன். அதற்கெல்லாம் பெரும் தடங்கல்களை இருந்தவர்கள் இந்த தழிழ் கட்சிகளே. நீங்கள் இதை நன்கு அறிவீர்கள். 

இன்று வேறு வழியில்லாமல் மேடைகளில் இதை ஒப்புக்கொண்டு மீண்டும் வாக்குக் கேட்கிறார்கள்.உங்களுக்கு நன்கு சிந்தித்து வாக்களிக்க இன்னும் நேரம் இருக்கிறது. நீங்கள் இதை மற்றவர்களுக்கும் ஆறுதலாக எடுத்துக்கூற வேண்டும். இதற்கு மேலும் நாம் அமைதியாய் இருந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை செய்ய வேலைவாப்பு இருக்காது. நாம் பிழையானவர்களுக்கு வாக்களிப்பது, அதன் பின் படித்த நம் பிள்ளைகள் கையில் வலையை கொடுத்து மீன் பிடிக்க கடலுக்கு அனுப்புகிறோம். 

கத்தியை தீட்ட தீட்ட கூராவது போல், நாம் நன்கு சிந்திக்க சிந்திக்க அறிவும் வளரும். தழிழ் பேசும் மக்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்று நான் ஒருபோதும் அரசுடன் இருந்துகொண்டு கூறியதில்லை. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வுகாணுவதற்கு சென்ற வழி பிழை. நாம் பிழையான பிரதிநிதித்துவங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தோம். இனங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு அரசியல்வாதி நல்ல தலைவனாக இருக்க முடியவே முடியாது. இங்குள்ள பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணங்கள் இருந்த தலைவர்கள். கடந்த காலம் என்பது சென்றுவிட்டது, எதிர்காலம் என்பது நாம் சந்திக்கப்போவது. ஆகையால் வரப்போகும் காலத்தை ஒரு சுபீட்சமான, ஒளிமயமான எதிர்காலமாக மாற்ற வேண்டியது இதைப் படிக்கும் ஒவ்வொருவரதும் பொறுப்பு, கடமை. எமது நாட்டிலும் பார்க்க சிறிய சிங்கப்பூர் செழிப்பாக இருப்பதற்குக் காரணம்? மக்கள் எடுக்கும் சிறந்த முடிவுகள். 

ஆகவே வாசிப்பதுடன் நிறுத்தாமல் மற்றவர்களுடன் ளூயசந பண்ணவும். அதுவே நீங்கள் என் வெற்றிக்கு ஆற்றும் பங்கு. வாருங்கள்.. மட்டக்களப்பின் பிள்ளைகள் என்ற ரீதியில் கைகோருங்கள். மாற்றம் என்று ஒன்று தேவைப்பட்டால், அதற்கு முதல் காலடியென்று ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதற்கு தயங்காதீர்கள்




SHARE

Author: verified_user

1 Comments:

Mukunthan said...

https://www.facebook.com/pages/Somasundaram-Ganeshamoorthy/863770150338624?fref=ts
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்