24 Jul 2015

திருமலையில் அஞ்சல் வாக்குகளை வகைப்படுத்தி விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

SHARE

நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை தபால் திணைக்களத்தின் ஊடாக உரிய திணைக்களங்களுக்கு விநியோகிக்கும் வகையில் அவற்றை வகைப்படுத்துகின்ற நடவடிக்கை தற்போது திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றன.

வுகைப்படுத்துகின்ற நடவடிக்கைகள்  18 அமர்வுகளில்  நடைபெற்று வருகின்றன. இதற்காக 130  பேரிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான என்.ஏ.ஏ.புஷ்பகுமார  தெரிவித்தார்.

மொத்தமாக 11451 பேர் அஞ்சல் வாக்குகளுக்காக விண்ணப்பித்திருந்ததாகவும் அவற்றுள் 337 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும்; மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: