24 Jul 2015

சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் முதலமைச்சரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

SHARE

கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கடந்த ஜூலை ஆறாம் திகதியில் இருந்து சுகாதார தொண்டர் தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை, புதியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் நடத்துவோம் என்றும் தொடர்ந்து 16 நாட்கள் நடாத்தப்பட்டுவந்த போராட்டம் முதலமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் நிறுத்தப்பட்டது.

போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்ததுடன் தேர்தலின் பின்னர் நியமனம் வழங்கும் விபரம் பேசப்படும் அதன்போது உங்கள் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டு நியமனம் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படும் அதன்போது அனைவரையும் அழைக்கிறேன் கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கமைவாக அனைவரும் கலைந்து சென்றனர்.
முதலமைச்சருடன் அமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.ரி.எம்.ராபி மற்றும் சிலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: