29 Jul 2015

யுத்த காலத்திலேயே அதிகளவான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டன

SHARE

ஏ.எச்.ஏ.ஹுஸைன் 
யுத்த காலத்தில் அதிகளவான தென்னை மரங்கள் மனிதனால் அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர்ச்; செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி மைலம்பாவெளியிலுள்ள தென்னை அபிவிருத்திச் சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், '
1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு முன்னராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 தொடக்கம் 22 ஆயிரம் ஹெக்ரேயரில் தென்னைகள் இருந்தன. அப்போது, தெங்குச் செய்கையில் இம்மாவட்டம் வளர்ச்சி அடைந்து தேங்காய் உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருந்தது. மேலும், இம்மாவட்டத்திலிருந்து தேங்காய்கள் வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
ஆனால், சூறாவளி தாக்கி தற்போது 37 வருடங்கள் கடந்த நிலையிலும், தென்னை உற்பத்தியில் அன்றிருந்த நிலையை மட்டக்களப்பு மாவட்டத்தில்; எட்ட முடியவில்லை' என்றார். தற்போது வருடம் தோறும் இலட்சக்கணக்கான தென்னங்கன்றுகளை நடுகைக்காக நாம் விநியோகிக்கின்றோம். இதற்கிடையில் இயற்கை, செயற்கை அழிவுகளும் இடம்பெறுகின்றன. இயற்கையால் அழிந்த தென்னை மரங்களை விட, யுத்த காலத்தில் மனிதனால் அழிக்கப்பட்ட தென்னைகளே அதிகமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்..
SHARE

Author: verified_user

0 Comments: