26 Jul 2015

வட, கிழக்கில் 18 முதல் 20 க்கும் இடையிலான ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றவேண்டும்.

SHARE
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதே தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கமுடியும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு துறைநீலாவணையில் ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், அவ்வாறு இல்லாவிடின், எமது பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டி ஏற்படுமென்பதுடன்,  அப்பிரதிநிதித்துவம்  வேறு இனத்துக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது' என்றார்.

 '
தமிழ் மக்களுக்கான உரிமையை பெறுவதற்காக எமது இளைஞர்களினால் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழியில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. 'எதிர்வரும் பொதுத்தேர்தலில் வட, கிழக்கில் 18 முதல்  20 க்கும் இடையிலான  ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றவேண்டும். அப்போதே, ஆட்சி அமைக்கவுள்ள அரசாங்கத்துடன் எம்முடைய  உரிமைப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். அதற்கு எங்களின் வாக்குப்பலமே மேலானது. ஒவ்வொருவரும் தங்களது வாக்கை அவசியம்  அளிக்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

1 Comments:

Shiva Sampanthan said...

நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624