கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதரகத்தின் இலங்கைக்கான ஊடக, கலாசார, மற்றும் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் நிகல் சுலிக் (NICOLE
CHULICK-Director Press, Cultural, & Educational Affairs Embassy of the US) மற்றும் தொடர்பாடல் உதவி அதிகாரி (Communication
Assistant) ஒமர் ராஜரெட்ணம் ஆகியோர் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
புதனன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் முழு நேர பிராந்திய ஊடகவியலாளர்களைச் சந்தித்தித்த அமெரிக்க அதிகாரிகள் ஊடகவியல் பணிகளை நேர்த்தியாகச் செய்யக் கூடிய ஏற்பாடுகள் குறித்தும் ஊடகத்துறையில் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பயிற்சித் தேவைகள் மற்றுமுள்ள வசதி வாய்ப்புக்களை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.
தொழில்வாண்மையுள்ள ஊடகத்துறைக்கான பயிற்சிகளை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்து தர முடியும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
செவ்வாய் காலை களுவாஞ்சிக்குடியில் இயங்கிவரும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டப் பாடசாலைக்கும் அவர்கள் விஜயம் செய்து அத்திட்டத்தின் அமுலாக்கம் பற்றி அறிந்து கொண்டனர்.
செவ்வாய் மாலை அமெரிக்க நிதி அனுசரணையில் இயங்கிவரும் மட்டக்களப்பு ஹேட்வே ஆங்கில மொழி அறிவூட்டல் கல்லூரியில் ஆங்கில மொழி கற்கும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க மத்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் நிக்கல் சுலிக் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் மற்றும் ஆங்கில மொழி பேச்சாற்றல் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 30 மாணவர்கள் 2 வருட இலவச ஆங்கில மொழிப் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு பயின்று கொண்டிருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment