கடந்த
ஆட்சியில் ஒரு சிலரின் பைகளுக்குள் மட்டும் இருந்த பணம் இன்று மக்களின்
கைகளுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் நாடு அபிவிருத்தி காணப்போகின்றது என
மட்டக்களப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு
களுவன்கேணிக் கிராமத்திற்குச் செல்லும் வீதியின் அபிவிருத்திப் பணிகளை
ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்று வர்த்தக
சங்கத் தலைவரும் நிதியமைச்சரின் இணைப்பாளருமான கே. மோகன் தலைமையில்
களுவன்கேணி வீதியில் கூட்டம் இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய
அமைச்சர் இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் அபிவிருத்தி கிடைக்கக் கூடியவாறு
நீங்கள் இந்தப் புதிய அரசைத் தெரிவு செய்ததால் நான் நிதி அமைச்சராக
வந்துள்ளேன்.
ஏகாபத்தியத்திலிருந்து விடுபடுபடுவதற்காக
நீங்கள் எடுத்த இந்த முடிவின் பிரகாரம் புதிய ஜனாதிபதின் தலைமையின் கீழ்
நாடு ஒன்றுபட்டுள்ளது. அதன்காரணமாக நான் நாட்டு மக்களுக்கெல்லாம் நன்மை
தரக்கூடிய புதிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முடிந்ததால் அதன்
மூலம் நீங்கள் இன்று நன்மைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
காலாகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த களுவன்கேணி வீதி காப்பெற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு கோடி 30 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 வருடகாலமாக செய்ய முடியாமல் போன அபிவிருத்தித் திட்டங்களை நாம் வெறும் 29 நாட்களிலேயே செய்ய ஆரம்பித்துள்ளோம்.

இது கடந்த காலத்தில் மக்களை
ஏமாற்றியவர்களுக்கு ஆச்சரியத்தைத் ஏற்படுத்தியுள்ளது. கண்டு கொள்ளப்படாமல்
புறக்கணிக்கப்பட்டிருந்த நாட்டின் எல்லா மூலை முடுக்களிலும் பாரிய
அபிவிருத்திகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதையும் விட காத்திரமான
அபிவிருத்திகளைச் செய்வதற்கு எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலே ஐக்கிய
தேசியக் கட்சிக்கு வாக்களித்து அபிவிருத்தியின் சகல நன்மைகளையும் நீங்கள்
அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று உங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்
என்றார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நிதியமைச்சர் வாழைச்சேனை கிண்ணையடி, பேத்தாழை, கிரான், முறக்கெட்டான்சேனை பொதுமக்களினால் வரவேற்க்கப்பட்டார். அதனையடுத்து பல காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த களுவன்கேணிக்கான பிரதான போக்குவரத்து பாதைக்குரிய புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கோட்டமுனைப் பாலத்தில் இருந்து மாவட்ட செயலாளர் உட்ப்பட மாநகர ஆணையாளர் உதயகுமார், வருமான வரி ஆணையாளர் எம்.கணேஸலிங்கம் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகளினால் வரவேற்க்கப்பட்டு மட்டக்களப்பு தனியார் பேரூந்து தரிப்பிடம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 2 மணிக்கு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

0 Comments:
Post a Comment