9 Mar 2015

கிழடித்தீவு வைத்தியசாலை வேண்டுமென்று ஒதுக்கப்பட்ட இடமாக அல்லது வைத்தியசாலையாக இருந்து விட்டதோ என்ற கவலை என்மனதில் எழுகின்றது

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்துள்ள மகிழடித்தீவு வைத்தியசாலையினை தற்போதைய சூழலில் வருகை தந்து பார்க்க கிடைத்தமை இட்டு  மகிழ்ச்சி கொள்வதுடன், இவ் வைத்தியசாலையின் நிலைமைகளை அவதானித்தபோது பாரிய கஸ்டத்திற்குள் இருக்கின்ற நிலைமையை  காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக இவ்வைத்தியசாலைய் பெறுத்தவரையில் கவலையான  விடயம் என்னவெனில் நோயாளர்களுக்குரிய கட்டில்கள் இல்லாத நிலையில் நோயாளர்கள் நிலத்திலே பாயினை விரித்துக் கொண்டு உறங்குகின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையை எந்தவொரு மனிதாபிமானமுடைய மனிதர்களும் ஏற்றுக் கொள்ளமுடியாது.  இந்நிலையை நிவர்த்தி செய்வதற்கு  கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என கிழக்கு மாகாகண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (08) மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்த முதலமைச்சர் வைத்தியசாலையினைப் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது இராஜங்க சுகாதார அமைச்சர் ஹசன் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், சுகாதார திணைக்களத்தினரும். கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்….

இவ் வைத்தியசாலையில் சென்ற வருடம் 52941பேர்  சிகிச்சை பெற்றுள்ளனர். இதனை ஒரு வைத்தியர் இருந்தே சிகிச்சை அளித்துள்ளார். இது ஒருவர் இருந்து இந்நோயளார்கள் 52941பேரையும் விரைவில் சிலவேளை குணப்படுத்த முடியாது  நிலைக்கு அவர் தள்ளப்படுவார். இதனால் எவ்வளவு அழுத்தம் அவருக்கு இருக்கும் என்பதை எம்மால் உணரமுடிகின்றது. அண்ணளவாக 145 பேர் ஒரு நாளைக்கு வருகின்றனர். 145 பேருக்கு ஒரு வைத்தியர் சிகிச்சை அளிக்க முடியாது.

எனது பார்வையில் இது வேண்டு மென்று ஒதுக்கப்பட்ட இடமாக அல்லது வைத்தியசாலையாக  இருந்து விட்டதோ என்ற கவலை என்மனதில் எழுகின்றது. என தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வைத்தியசாலையில் உள்ள குறைகள் தொடர்பாக வைத்திய அதிகாரி டொக்டர்.த.தவனேசன் தெரிவிக்கையில்….
இங்கு கட்டடவசத்தி, தளபாடங்கள் வசதி இன்மை, ஆளனி பற்றாக்குறை போன்றவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் அதுபோன்று வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதற்கமைய  இவ்வைத்தியசாலைக்கு உடனடியாக கட்டடம் அமைத்தல், தாதிமார் பிரச்சினையும் மிகவிரைவில் தீர்த்து வைத்தல், போன்ற விடையங்களை மேற்கொள்வதற்கு என்ன விடயங்கள் செய்யவேண்டுமோ அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கமும், மாகாண சபையும் இணைந்து உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம். என இராஜங்க சுகாதார அமைச்சரும், கிழக்கு முதலமைச்சரும் உறுதியளித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: