12 Mar 2015

மட்.வெல்லாவெளி மலைமகள் வித்தியாலயத்தில் மகளிர் தின நிகழ்வு.

SHARE
 சர்சதேச மகளிர் தின நிகழ்வொன்று புதன் கிழமை (11) மட்.வெல்லாவெளி மலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ச.கணேசமூர்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், உட்பட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மகளிர் தினத்தினைப் பற்றி மாணவர்களும், கலந்து கொண்ட அதிதிகளும், உரைகளை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் வெல்லாவெளி கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 மகளிருக்கு, பாடசாக்காக சேவையாற்றிய 13 ஆசிரியைகளுக்கும் பாடசாலை நிருவாகத்தினரால் பரிசில்களும், பாராட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
































SHARE

Author: verified_user

0 Comments: