கிழக்கு
மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் (11) கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்டினை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்கள்.
இதன்போது தாம் கடந்த 10 வருடங்களுக்கு
மேலாக கடமையாற்றி வருவதாகவும் ஆனால் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம்
வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தின 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்
தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி மகஜர்
ஒன்றையும் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள்.
எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர்
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக முதலமைச்சர்
உறுதியளித்ததாகவும் தவறும் பட்சத்தில் தமது போராட்டத்தை தொடர்ந்தும்
மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது தொண்டர் ஆசிரியர்கள்
குறிப்பிட்டார்கள்.இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண முதலமைச்சருடன்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரும் இணைந்திருந்தார்.
0 Comments:
Post a Comment