6 Mar 2015

சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழா அங்குரார்ப்பண நிகழ்வு

SHARE
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று (05) வியாழக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பேதானாசிரியர் ஐ.எம்.கடாபி, உடற்கல்வி ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ், சாய்ந்தமருது பிரதேச இளைஞர்; கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்;.
இவ்விளையாட்டு விழாவில் முதற்போட்டியாக இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியினை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 
இவ்விளையாட்டு விழாவில் கிரிக்கெட், உதைப்பாந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே, கபடி, மெய்வல்லுனர் நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: