5 Mar 2015

நான் யாரையும் காதலிக்கவில்லை

SHARE
‘வாகை சூடவா’ படம் மூலம் இனியா பிர பலமானார். இதில் அவர் பாடிய சரசர சாரக்காற்று பாடல் விருதுகளை குவித்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக வந்தார். தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘காதல் சொல்ல நேரம் இல்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இனியா காதல் வலையில் விழுந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதுகுறித்து இனியா அளித்த பேட்டி வருமாறு:–

நான் தற்போது நடித்து வரும் படங்களில் நல்ல கேரக்டர்கள் அமைந்துள்ளன. ‘காதல் சொல்ல நேரம்’ இல்லை படம் காமெடி கதையம்சத்தில் தயாராகிறது. பழைய காதலிக்க நேரமில்லை படம் போல் இது இருக்கும்.

‘வாகை சூடவா’ படத்துக்கு பிறகு சினிமாவில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன் வேறு பெயரில் நடித்தேன். ‘வாகை சூடவா’ படத்தில் டைரக்டர் சற்குணம் எனக்கு இனியா என பெயர் வைத்தார். ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் கதை மிகவும் பிடித்தது. இதில் என்னுடன் நீதுசந்துரா, சுஜா வாரினி போன்றோரும் நடிக்கின்றனர்.

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது இல்லை. விரும்பியதை சாப்பிடுவேன். நடனம் ஆடி எடையை குறைக்கிறேன். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க ஆசை உள்ளது.  இவ்வாறு இனியா கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: