1 Mar 2015

மண்ணைக் கவ்வியது இங்கிலாந்து - இலங்கை அபார வெற்றி

SHARE
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 22வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலாவதாக நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பாக அதிரடியாக ஆடிய ரூட் 121 ஓட்டங்களைக் குவிக்க, 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து 309 ஓட்டங்களை விளாசியது.

இதன்படி 310 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமானே சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.

ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை இன்று பதிவு செய்த அவர், உலகக் கிண்ணப் போட்டிகளில் சதமடித்த இளம் வயது இலங்கை வீரர் என்ற பெருமையையும் தனதாக்கினார்.

மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலஹரத்ன டில்ஷான் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார்.

பின்னர் திருமானோவுடன் ஜோடி சேர்ந்த குமார் சங்கக்கார அதிரடியாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனது 23வது சதத்தை விளாசினார்.

47.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 312 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்த இலங்கை வெற்றி வாகை சூடியது.

திருமானே 139 ஓட்டங்களுடனும் சங்கக்கார 117 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: