மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிரதேசத்திலுள்ள நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை இன்று வியாழக் கிழமை (12) களுதாவளை பெதுக் கட்டடத்தில் நடைபெற்றது.
களுதாவளைப் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மு.கிருபாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சத்திர சிகிச்சையின்போது 57 நாய்களுக்கு கருத்தடைச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும், எதிர் காலத்தில் தெரு நாய்களின் தொல்லை குறைவடையும் எனவும் களுதாவளைப் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மு.கிருபாகரன் கூறினார்.
0 Comments:
Post a Comment