14 Mar 2015

மட்டக்களப்பில் சுனாமி ஒத்திகை

SHARE
சுனாமி ஒத்திகை நிகழ்வொன்று  (10) மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவுள்ள தேசிய அனர்த்த ஒத்திகை நிகழ்வுக்கமைய மாவட்டத்தின் அனைத்து அனர்த்த எச்சரிக்கை கோபுரங்களுக்கருகில் இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.

நேற்று பிற்பகல் 3.30மணியளவில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து நடத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேசிய நிகழ்வு கோட்டைக்கல்லாறில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடாத்தப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்வில் படை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் டாக்டர் செல்வி வி.ஜனனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அவ்வாறான அனர்த்தம் ஏற்படும்போது எவ்வாறு அதில் இருந்து காத்துக்கொள்வது சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முறைகள் போன்ற பயிற்சிகள் ஒத்திகையாக நடாத்தப்பட்டது.இந்த ஒத்திகை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் பங்குகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.
Tsunami-2
Tsunami-3
SHARE

Author: verified_user

0 Comments: