மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேசத்தில் வெள்ளிக் கிழமை (14) பெண்களிற்கான சிறந்ததோர் நாடு எனும் தொணிப்பொருளில் பேரணி ஒன்று இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் போதீவுப் பற்று பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போரணியில் போரதீவுப் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 500 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல்லாவெளி சந்தி மற்றும், கோவில்போரதிவு சந்தி, ஆகியவற்றிலிருந்து இரண்டு பிரிவுகளாக வந்த இப்பேரணி பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள், நல்ல மக்கள் தாயாக வாழ்பவள் பெண், தன்மானம் காப்பதும் பெண்மானம் காப்பதும் பெண், பொறுமையில் சிறந்த பூமியுண்டு பூமியை மிஞ்சும் பெண்மையுண்டு, ஆண்மையே ஒருகணம் சிந்திப்பாய் உன் உருவாக்கம் பெண்தான், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு பெண்கள் இப்பேரணியில் கலந்து கொண்ருந்தனர்.
இதன்போது வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் போதீவுப் பற்று பிரிவின் மகளிர் அணியினால், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
எங்கள் பரதேச செயலகப் பிரிவில் போதைவஸ்தால் ஏற்படும் வன்முறைகளை இல்லாதொழிக்கவும், எங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும், வன்முறையற்ற சமுதாயம் ஒன்றை அமைப்பதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment