6 Mar 2015

யாவருக்கும் முதலுதவி அறிவு அவசியம் – வசந்தராஜா

SHARE
நோயும் விபத்தும் எப்போதும் ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்த்தில் உயிராபத்தும் ஏற்படுவதுண்டு. உயிராபத்தை போக்குவதற்கும் நிலமை மோசமடையாமல் இருப்பதற்கும் விரைவில் குணமடைவதற்கும் முதலுதவி அறிவு அவசியம். என சிரேஸ்ட முதலுதவிப் போதனாசிரியரும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவருமான த.வசந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சி புதன் கிழமை (04) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியை  ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் உத்தியோகத்தர் எஸ்.உதயகுமாரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்.

உடலில் காயங்கள் ஏற்படும் போதும், அவயவங்களில் முறிவுகள் ஏற்படும் போதும், சாதாரண மக்களால் அவற்றை கையாளத் தெரிவிதில்லை. அதே போன்று நஞ்சு அருந்திய போதோ அல்லது தொண்டையில் உணவு, நீர் முதலானவை சிக்கும் போதோ அவற்றை எவ்வாறு கையாள்வதென்று படித்தவர்களுக்குக் கூட தெரிவதில்லை. இதனால் உயிரிழப்புக்களோ அல்லது உடற்பாதிப்புக்களோ ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமானால் முதலுதவி அறிவு மக்களிடையே பரப்பப்படல் வேண்டும்.  முக்கியமாக வேலைத் தளங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வேலைத் தளங்களில் உள்ளோரில் கணிசமானோர் முதலுதவி அறிவு பெற்றோராய் இருத்தல் அவசியம். அந்த வகையிலே மட்டக்களப்பிலே பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அதன் நிர்வாகம் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கி வருவது மிகவும் வரவேற்கத் தக்கதாகும் என அவர் கூறினார்.

இதன்போது மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கடமை புரியும், 30 உத்தியோகத்தர் கருக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது.

இம்முதலுதவிப் பயிற்சியில ச.கணேசலிங்கம் மற்றும் சீ.கஜேந்திரன் ஆகியோர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டததலைவரின் வழிகாட்டிலில் பயிற்றுனர்களாக் செயற்பட்டனர்.
 













SHARE

Author: verified_user

0 Comments: