கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போனதாகக் கருதப்படும் வாலிபர் ஒருவரது சடலம் மட்டக்களப்பு-செங்கலடி கறுத்தப்பாலத்தின் கீழ் கிடந்து புதன் கிழமை 18.02.2015 புதன்கிழமை மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
உருக்குலைந்து துர்வாடை வீசிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் மட்டக்களப்பு-கொம்மாதுறை உமா மில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடைய சுந்தரம் மகேந்திர ராஜா என்பவருடையதென்றும் இவர் காக்கை வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவரெனவும் அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதியம் வீட்டிலிருந்து சென்ற இவர் மீண்டும் வரவில்லையென தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர்ப் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment