12 Feb 2015

சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சாரதி

SHARE
அக்கரைப்பற்று பிரதேசத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 62 வயதுடைய சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (11) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி சாரதி 8 வயதான சிறுவன் மற்றும் சிறுமி ஒருவரையும் பாடசாலைக்கு தினமும் ஏற்றிச் செல்வார்.

சம்பவ தினமான நேற்று புதன்கிழமை பகல் பாடசாலை முடிந்தவுடன் சிறுவனை ஏற்றிய பின்னர் சிறுமியை ஏற்றுவதற்காக, அவரின் பாடசாலைக்கு அருகில் காத்திருந்துள்ளார்.

இதன்போது, சிறுவனை சாரதி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவன், வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுவன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: