1 Mar 2015

கிழக்கு மாகாணத்தில் முறையற்ற இட மாற்றங்கள் இனியும் ஏற்படக் கூடாது.- கிமா.சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன்

SHARE
கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் பதவியேற்ற உடன் முதலமைச்சர் செயகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் வெ.இராஜசேகரம் அவர்களை திடீர் இடமாற்றம் ஒன்றை தமது பணிப்பின் பெயரில் மேற் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் முதலமைச்சரை நேரடியாக சந்தித்து தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
 
மேலும் இவ்விடயம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என கோரியதுடன். இவ்வாறான திடீர் இடமாற்றங்களை மேற் கொள்வதன் மூலம் கிழக்கு மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்த வேண்டாம் எனவும் வினையமாக கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் குறுகிய கால எல்லைக்குள் இந்த இடமாற்றம் தொடர்பிலான பிரச்சினைக்கு சாதகமான தீர்வு ஒன்றினை வழங்குவதாக உறுப்பினர் ஜெனார்தனன் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் எவ்வகையான ஆட்சி மாற்றங்கள் இடம் பெற்றாலும் தமிழராக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் முஸ்லீம்களாக இருந்தாலும் இவ்வாறான திடீர் மற்றும் முறையற்ற விதத்தில் தங்களின் தேவைகளுக்காகவென  இடமாற்றங்களை மேற் கொள்ள வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தழிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் கோரிக்கை ஒன்றையும் முன் வைத்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: