திருகோணமலை
மாவட்டத்தில் 1500 காணி உறுதிப்பத்திரங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று
(09) திருகோணமலை மாவட்டச்செயலகத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 100 நாட்களுக்குள் நாட்டின்
அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்களாக 30,000 காணி உறுதிப்பத்திரங்கள்
வழங்கும் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
காணி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ்.
குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழே
இந்நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் 25,950
காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. காணி அமைச்சு மற்றும் காணி
ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டமானது
அரசின் 100 நாள் திட்டத்தில் கூறப்பட்டதற்கமைய முன்னெடுக்கப்படுகிறது
என்று காணி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஐ.எச்.கே மஹானாம தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment