மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் மாத சஞ்சிகை இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீசைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் மத்தியில் கடந்த ஜனவரி மாதம் நடாத்திய முன்னோடிப் போட்டிப் பரிட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்குரிய பரிசில்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (07) மட்.கிரான்குளம் விநாயக வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தென்றல் மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.தங்கேஸ்வரி, ஓய்வு பெற்ற அதிபர் த.கோபாலபிள்ளை, மற்றும், தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் பீட உறுப்பினர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பாடசாலைகளைச் சேர்ந்த 160 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றியிருந்தனர். இவர்களுள் 91 மாணவர்கள் மாத்திரம், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதில் முதலாம் இடத்தினை மட்.கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தைச் சேர்ந்த ச.டிதுர்சிகா 168 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கைத்தையும்,
இரண்டாம் இடத்தை மட்.அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த வே.கிவேனிக்கா 166 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்,
மூன்றாம் இடத்தை மட்.வால்க்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த த.சோபினிக்கா 164 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், பெற்றுக் கொண்டுள்ளதாக தென்றல் சஞ்சிகiயின் பிரதம ஆசிரியர் க.கிருபாகரன் கூறினார்.
0 Comments:
Post a Comment