மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு
இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்கள், மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலையை சேர்ந்த மகேந்திரன் நர்மதன் (வயது 25) மற்றும் கோபிந்தன் தனபதி (வயது 26) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி இரு இளைஞர்களும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியில் வந்த வாகனமொன்று மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment