மட்.மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல
மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிய வெள்ளிக் கிழமை (13) மாலை மேற்படி
பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர்
எஸ்.புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பா.அசியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், பட்டிருப்பு
வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், உட்பட, கல்வி அதிகாரிகள்,
அதிபர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து
கொண்டிரந்தனர்.
இதில் குறிஞ்சி இல்லம் 615 புள்ளிகளைப் பெற்று
முதலாம் இடத்தையும், முல்லை இல்லம் 602 புள்ளிகளைப் பெற்று இரண்டாம்
இடத்தையும், மருதம் இல்லம் 588 பள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்
பெற்றுக் கொண்டது.
இதன்போது அஞ்சல் ஓட்டம், 100 மீற்றர் ஓட்டம், போன்னற விளையாட்டுகள் இடம்பெற்றதோடு மாணவர்களின் அணிநடைக் கண்காட்சியும் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற வீர வீராங்கணைகளுக்கு வெற்றிக் கேடையங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment