9 Feb 2015

கல்லடி அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய இராஜகோபுர மஹா கும்பாபிசேகம்

SHARE
மட்டக்களப்பு, கல்லடி அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன, ஜீனோர்த்தன, அஸ்டபந்தன, நவகுண்டபக்ஸ, இராஜகோபுர மஹா கும்பாபிசேகம் இன்று (09)  காலை சிறப்பாக நடைபெற்றது.

இன்று திங்கட்கிழமை காலை 6.50 தொடக்கம் 7.25 மணி வரையுள்ள சுபவேளையில் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது. இன்று காலை விசேட கிரியைகள், யாகம், கும்ப பூஜை என்பன நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல தூபி கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின் ஆலயங்களும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: