வருடாவருடம் பட்டாபுரம் கிராம மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்
படுகின்றார்கள். அதன்போது பலவேளைகளில் அவர்கள் கிராமத்தை விட்டு இடம்
பெயர்ந்தும் செல்லுகின்றார்கள். அதன்போது நிவாரணம் வழங்கப்படுகிறது. நிலமை
சீரடையும்போது மீண்டும் மக்கள் வீடுகளுக்கு வருகின்றார்கள். அங்கே அவர்கள்
சந்திக்கும் இழப்புக்கள் சொல்ல முடியாதவை.
என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கீழுக்கள போரதிவுப்பற்று பிரிவில் அமைந்திருக்கும் பட்டாபுரம் செஞ்சிலுவை அலகிற்றகான வருடாந்த பொதுக்கூட்டம் மேற்படி அலகுத்தலைவர் த.முருகதாஷன் தலைமையில் பட்டாபுரம் பாலர் பாடசாலைக் கட்டடத்தில் புதன் கிழமை (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக்க கலந்து கொண்டு மக்கள் மத்தியல் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
தொடரந்து இழப்புக்களைச் சந்திக்கும், இந்நிலமை தொடரக்கூடாது, என்பது மக்களாகிய உங்கள் விருப்பமாக இருக்கிறது. வடிகால்வாய்களுடன் கூடிய வீதிகள் அமைக்கப்படல் வேண்டும் என்பது இக்கிராம மக்களது, கோரிக்கையாக இருக்கின்றது. இம்மக்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியவர்கள் அரசும் அரச தலைவர்களுமாவர். அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவக்கூடும்.
இதுவரைகாலத்திலும் அரசசார்பற்ற பல நிறுவனங்கள் இம்மக்களுக்கு, பல்வேறு விடயங்களில் உதவியுள்ளன. ஆனால் பொதுமக்களது, முக்கிய முதன்மையான தேவைகள் நிறைவு செய்யப்படல் வேண்டும் என்பதை செஞ்சிலுவை இயக்கம் உணர்ந்து கொள்கின்றது. வாய்ப்பும், வசதிகளும் வரும்போது உங்கள் முதன்மையான தேவையை நிறைவு செய்ய செஞ்சிலுவை அமைப்பு ஏனையவர்களுடன் சேர்ந்து முயற்சிகளை மேற்கோள்ளும்.
இருந்தபோதிலும், சாதாரணகாலத்தில் தன்னைத் தயார் செய்து ஆபத்துக்காலத்தில் மக்களுக்கு உதவுவதே செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய பணி. ஆனால் மக்களது பங்களிப்பின்றி அப்பணியை சிறப்பாக செய்ய முடியாது. அதனால் தாமாகவே முன்வந்த கிராமங்களில் செஞ்சிலுவை அலகுகளை அமைத்திருக்கிறோம.; மேலும் கோரிக்கை வருகின்ற கிராமங்களில் புதிய செஞ்சிலுவை அலகுகளை அமைத்து வருகின்றோம். அலகுகளினூடாக மக்களின் இயலுமையை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப் பற்று பிரிவின் அங்கத்தவர்கள், பட்டாபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

0 Comments:
Post a Comment