6 Feb 2015

வேனை விற்பனை செய்ய முயன்ற முன்னாள் புலி உறுப்பினர் கைது

SHARE
கடத்தப்பட்ட வேனை போலியான முறையில் இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க (புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்) உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்ட விஸேட பொலிஸ் நேற்று மாலை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மானிப்பயை சேர்ந்த குலேநதிரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேக நபர் 56-5647 என்ற வேனைக்கடத்தி அதன் எஞ்ஜின் இலக்கம் மற்றும் வர்ணத்தையும் மாற்றி காத்தான்குடிக்கு எடுத்துவந்து வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயன்றுன்றுள்ளார்.

குறித்த வேன் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின்கேரில் விசேட பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து குறித்த நபரும் வாகனமும் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெரத தெரிவித்தார்.

குறித்த நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். காத்தான்குயடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: