28 Feb 2015

தம்பலவத்தை கணேசா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

SHARE
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலவத்தை கணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை (26) தம்பளவத்தை பொது மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டதன் பின்னர் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஒலிம்பிக் சுடர் ஏற்றி  பாராளுமன்ற உறுப்பினரினால் விளையாட்டு நிகழ்வுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்களும் கிண்ணங்களும் கழகங்களுக்கு கிண்ணங்களும் வழங்கப்பட்டன. பாடசாலையின் இவ்வருட சாம்பியனாக பாண்டியன் இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் கௌரவ அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளைநாயகம் அம்மணி, போரைதீவுப்பற்று கோட்டைக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் உட்பட பாடசாலை ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Sports-1
 
Sports-2
Sports-3
Sports-7
Sports-8
SHARE

Author: verified_user

0 Comments: